வீட்டிற்குள் அத்துமீறி தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் நீர்வேலியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(08) சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வேலி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தனிப்பட்ட பகையே காரணம்
நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தாயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.