வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!
முல்லைத்தீவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முள்ளியவளை, முறிப்பு பகுதியில் உள்ள வீட்டில் தெய்வேந்திரம் புவனேந்திரராசா (42வயது) வசித்துவந்தவேளை வீட்டிற்குள் புகுந்த நபர் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.