தொலைக்காட்சி நாடக இயக்குனர் மீது வாள்வெட்டு
Sri Lanka Police
Kegalle
Sri Lanka Police Investigation
By Sumithiran
கேகாலை(Kegalle)ஹிரிவடுன்ன பகுதியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் தொலைக்காட்சி நாடக இயக்குனர் ஒருவர் வாள்வெட்டக்கு இலக்காகி அவரிடமிருந்து 160,000 பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கேகாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெம்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் தொலைக்காட்சி நாடக இயக்குனர் ஒருவரே வாள் வெட்டுக்கு இலக்காகியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
திருட்டு போன பொருட்கள்
பதினோராயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், கணினி மற்றும் ஹார்ட் டிஸ்க் என்பன திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அண்மையில் இலங்கை தொடர்பில் ஆவண படம் தயாரிக்க வந்த இங்கிலாந்து பெண்ணிடமிருந்தும் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட நிலையில் நேற்று (31 ) கொள்ளை சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்