T20 உலகக் கிண்ண டிக்கெட்டுகள் SLC அதிகாரப்பூர்வ இணையதளத்தில்
2026ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் ICC T20 உலகக் கிண்ணப் போட்டிக்கான டிக்கெட்டுகள் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன்படி குறித்த தொடருக்கான டிக்கெட்டுக்களை இலங்கை கிரிக்கெட் சபையின் (Sri Lanka Cricket – SLC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் இன்றில் இருந்து தொடருக்கான டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள - https://mycricket.com.lk/slcb-ticketing-frontend-ticketing-platform-ui/home
[BOK3SIF]
மொத்தம் 20 நாடுகள்
பெப்ரவரி 07 – மார்ச் 08 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கட் அணிகள் இதில் அடங்கும்.
மேலும், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
இலங்கையில் மொத்தம் 20 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறும்.
பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்தப் போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கையில் நடைபெறும் போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்.

ஆர். பிரேமதாச மைதானம் (கொழும்பு): 08 போட்டிகள்.
பல்லேகல சர்வதேச மைதானம் (கண்டி): 07 போட்டிகள்.
SSC மைதானம் (கொழும்பு): 05 போட்டிகள்.
2012ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை நடத்தும் மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் இதுவாகும். இத்தொடரின் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் பெரும் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |