வெளிநாடொன்றில் பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் உரிமை
உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்விக்கு கட்டுப்பாடுகள் கொண்டுள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.
பெண்களுக்கு எதிரான கல்வி உரிமையை அந்த நாடு தளர்த்தினால் மட்டுமே அந்த நாட்டை அங்கீகரிக்க முடியும் என்று சர்வதேச சமூகம் கூறியுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் கைப்பற்றியதையடுத்து பல விதமான சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.
தலிபான் அரசாங்கம்
அதில் பிரதான ஒன்றாக பெண் குழந்தைகள் 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாதென தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வி வரை படித்து வந்த பெண்களையும் கல்வி வளாகங்களில் இருந்து தலிபான் அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது 6ஆம் வகுப்பில் படித்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |