ஆப்கான் பெண்கள் தொடர்பில் தலிபான்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
woman
afghanistan
taliban
By Sumithiran
ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலிபான்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமி, பெண்களை சமூகத்தின் பாதியாக தாங்கள் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஒரு பெண்ணை அமைச்சராக்குவது அவர்களால் சுமக்கமுடியாத சுமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீதிகளில் போராட்டம் நடத்துபவர் ஆப்கன் பெண்கள் அல்ல என்று குறிப்பிட்ட ஹாஷிமி, அவர்கள் மேலும் ஆப்கானியர்களை பெற்றெடுப்பவர்கள் என்று கூறினார்.