விரைவில் வெளிவரவுள்ள தலிபான்களின் புதிய அறிவிப்பு!
Goverment
Afghanistan
Taliban
By Chanakyan
தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா பரதர் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று இஸ்லாமியக் குழுவில் குறைந்தது மூன்று ஆதாரங்கள் வெளிவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் புதல்வர் முல்லா மொஹட் யாகூப் மற்றும் ஷேர் மொஹமட் அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் ஆகியோர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பார்கள்.
இந்த அறிவிப்புகள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. தலிபான்களின் அனைத்து முன்னணி தலைவர்களும் காபூலுக்கு வந்துவிட்டனர்,
அங்கு புதிய அரசாங்கத்தை அறிவிப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.