மகிந்தவுடனான பேச்சு தோல்வி - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
mahinda rajapaksha
joshep stalin
teachers union
By Sumithiran
சம்பள முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் கூறுகையில்,
தாம் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
அதன்படி, ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறிய ஆசிரியர்கள் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவர் என தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி