ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை
ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்தும் இருதரப்பும் விவாதித்துள்ளன.
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை
இது குறித்துகத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

“பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், பதற்றத்தைக் குறைப்பதற்கும், உரையாடலுக்கான பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுடன், பிராந்திய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening