தமிழ் தேசியக் கட்சிக்குள் பிளவு - பதவி நீக்கப்பட்டாரா சிவாஜிலிங்கம்..
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் தான் நீக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் எமது செய்திப்பிரிவு, அவரிடம் வினவிய போதே அவர் இதனை உறுதிசெய்துள்ளார்.
முரணான கோரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்,13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான - முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தர்.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
கட்சி தலைமையின் கோரிக்கை

இந்த நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது.
அவர் பதவிவிலகாததை அடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டததாக செய்திகள் வெளியிாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.