சங்கு சின்னத்தில் களமிறங்கும் 9 தமிழ்க் கட்சிகள் - வெளியான அறிவிப்பு

Jaffna Suresh Premachandran Viswalingam Manivannan Local government Election
By Thulsi Feb 24, 2025 04:02 AM GMT
Report

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் (local government election) 9 தமிழ்க்  கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யாழ்ப்பாணம் (Jafffna) இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் சக தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் சக தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு

9 கட்சிகள் இணைந்து போட்டி

குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 9 கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

சங்கு சின்னத்தில் களமிறங்கும் 9 தமிழ்க் கட்சிகள் - வெளியான அறிவிப்பு | Tamil Parties To Contest On The Sangu Symbol

இன்றைய கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. ரவீந்திரா (வேந்தன்).

மற்றும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் சமத்துவ கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.


அநுர அரசு என்னை கைது செய்தாலும் ஆச்சரியபடவேண்டாம் : நாமல் கடும் சீற்றம்

அநுர அரசு என்னை கைது செய்தாலும் ஆச்சரியபடவேண்டாம் : நாமல் கடும் சீற்றம்

தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சாதகமான சுமோவின் பொதுச்செயலாளர் பதவி

தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சாதகமான சுமோவின் பொதுச்செயலாளர் பதவி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்