சொல்லிசைப் பாடகரின் கைது : விடுதலைக்கான நகர்வுகள் குறித்து சட்டத்தரணி விளக்கம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பெனிஸ்லஸ் துஷான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீதிமன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி அவருடைய விடுதலைக்காகவும் இவ்வாறான சட்டம் அவருக்காக பயன்படுத்த முடியாது என்பதையும் அனைத்து நீதிமன்ற தளங்களிலும் வலியுறுத்துவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரவாதத்திற்கு எதிராகவே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர ஒருவருடைய பேச்சுரிமைக்கு பயன்படுத்த முடியாது.
ஆனால் இந்த சட்டம் உருவாக்கப்பட்ட பிரிவைப் பார்க்கும் போது அதில் சொல்லப்பட்டதாவது, நீங்கள் ஒரு விடயத்தை பேசினாலோ, எழுதினாலோ, சைகைகளால் கூட இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தினால் அதை அடிப்படையாக வைத்து ஒருவர் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றார் என்ற போர்வையில் கைது செய்யலாம்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது மனித உரிமை நியமங்களுக்கு முற்று முழுதாக புறம்பானதாகும். மனித உரிமை நியமங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட சட்டமான ஐசிசிபிஆர் கூட இங்கு பிழையாக பயன்படுத்தப்படுகின்றது” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க ......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |