இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் பிரதேச காணிகள் -ரணிலின் திட்டம் அம்பலம்
Sri Lankan Tamils
Trincomalee
Ranil Wickremesinghe
Sri Lanka
India
By Sumithiran
திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயன்று வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தைப் போன்றே அதுவும் சிறந்த பிரதேசம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களை வெளியேற உத்தரவு

தற்போது திருகோணமலையில் குறித்த காணிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் உள்ள 3500 குடும்பங்களை வெளியேற்றுவது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.