தமிழினம் கல்வியைக் கைவிடும் துர்ப்பாக்கிய நிலை
தமிழினம் கல்வியைக் கைவிடும் துர்ப்பாக்கிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
அதேநேரம், யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று(7) நடைபெற்ற நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் தெரிவித்தார்.
நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கைலாசபதி கலையரங்கில் இன்று(7) காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.
சமூகக் கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இடம் பெறும் நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடானது தொடர்சியாக இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கிருஸ்ணப்பிள்ளை விசாகரூபன் தலைமையில் ஆரம்பமான ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் கலை, கலாச்சார நிகழ்வுகள் , ஆய்வுரைகள் மற்றும் புலமையாளர் கௌரவிப்புக்கள் என்பன இடம்பெற்றன.


