அம்பிகைக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த தமிழர்கள் - போராட்ட இடத்தினை நோக்கி மாபெரும் வாகனப் பேரணி
Protest
People
United Kingdom
By Vasanth
தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 8 ஆவது நாளாக உண்ணா நோன்பிருக்கும் அம்பிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக,
பிரித்தானிய அரசின் மௌனம் கலைத்து கவனத்தை திருப்பும் நோக்கில் சற்று முன்னர் ஒன்று திரண்டுள்ள பெருந்திரளான மக்கள் அம்பிகையின் போராட்டம் நடைபெறும் இடத்தினை நோக்கி வானகப்பேரணியாக செல்லவுள்ளனர்.





