தாய் நாட்டில் உரிமை மறுக்கப்பட்ட சாபத்தைப் பெற்ற இனம் தமிழினம் (காணொளி)
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை குறித்து உலக அரங்கில் பேசப்பட்டாலும், அனைத்துலகும் இடைத்துறைக்கும் இந்த தார்மீக உரிமைகள் கொழும்பு அதிகார மையத்தினால் எப்போதும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாது என்பதை இந்த ஆண்டுக்கான மாவீரர் நினைவு நாளில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நினைவேந்தல் குறித்து கொழும்பு அதிகார மையத்திற்கு காலம் காலமாக இருக்கும் ஒவ்வாமைக்குணம் இந்த ஆண்டும் தொற்றிக்கொண்டதால் ஒளியால் எம்மவரை அக வணக்கம் செய்யும் நினைவேந்தல் நாளன்று வடக்கு கிழக்கில் இறுதி வேளையிலும் அடக்குமுறையைக் காட்ட தவறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கிரான் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்ச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு மாவீரர் நினைவு நாளில், இடையே புகுந்து அட்டூழியம் புரிந்த காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
மாவீரர்களுக்கான மரியாதை
மண்ணுக்காக இன்னுயிரை ஈகம் செய்த உறவுகளுக்காய் ஒளியேற்றி கண்ணீருடன் வணக்கம் செய்ய காத்திருந்த உறவுகளின் ஆசையை நிராசையாக்க எத்தனையோ முயற்சிகள் செய்து தோற்ற போதும் இறுதி நொடியும் சலிக்காது குழப்ப காவல்துறை சுத்தமாகி செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எத்தனை விதமாக இன்னல் புரிந்தாலும் தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழன் புலம்பெயர்ந்த மண்ணிலும் அவன் வீரத்தை பறைசாற்ற உறுதி பூண்ட நம்மவர்கள், தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களிலும், புலம்பெயர் தேசத்தில் எட்டுத்திக்கும் முழங்கும் பேரொலியுடனும் எம்மவருக்கான மரியாதையினை செலுத்தியிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளையும் உலக நிலவரங்களையும் தெரிந்து கொள்ள செய்தி வீச்சு நிகழ்ச்சியினைக் காண்க,
