ஓரணியில் திகழும் சிங்கள தலைமைகள் :துண்டு துண்டாக பிளவுபட்டுள்ள தமிழர்கள் : சிறீதரன் வேதனை
S. Sritharan
Local government Election
ITAK
By Sumithiran
தமிழ் மக்களை படுகொலை செய்த சிறிலங்கா படைத்தளபதிகளை பிரித்தானியா தடை செய்ததும் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் அதற்கு எதிராக ஓரணியில் திகழ்ந்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இல்லாத விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த தடைக்கு எதிராக கொக்கரிக்கின்றார்கள்.அதிலும் தயாசிறி ஜயசேகர,வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்தவர்களால்தான் இந்த நிலைமை வந்ததாக கூறுகிறார்.
இதில் சிஙகளவர்களின் ஒற்றுமை எப்படி உள்ளது என்பதை பாருங்கள். ஆனால் நாங்கள்தான் அதாவது தமிழர்கள்தான் துண்டு துண்டாக பிரிந்து போய் நிற்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
நெடுந்தீவில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்