மீண்டும் பதற்றம் : ஈரான் ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான கடற்பரப்பில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய இரண்டு துப்பாக்கிப் படகுகளால் ஒரு எண்ணெய்க் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்திருப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) இன்று(18)சனிக்கிழமை தெரிவித்தது.
"எந்தவொரு VHF (ரேடியோ) சவாலும் இன்றி, இரண்டு IRGC துப்பாக்கிப் படகுகள் தன்னை நெருங்கியதாகவும், பின்னர் அவை எண்ணெய்க் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஒரு எண்ணெய்க் கப்பலின் மாஸ்டர் தெரிவித்தார்." என்று அந்த முகமை,சமூக ஊடகத் தளமான X-இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள சம்பந்தப்பட்ட பகுதியின் வரைபடத்துடன் கூறியுள்ளது.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை
ஓமானுக்கு வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், எண்ணெய்க் கப்பலும் அதன் பணியாளர்களும் "பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் அது மேலும் தெரிவித்தது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |