பாடசாலையில் திருட்டில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
தான் கற்பித்த பாடசாலையிலேயே மாணவர்களுக்குரிய பொருட்களை திருடிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுரலிய பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட உயர்தரப் பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது

பாடசாலையின் அலுவலக அறையை உடைத்து 40 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி, அம்ப் மற்றும் மல்டிமீடியா புரொஜெக்டரை குறித்த ஆசிரியர் திருடியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பதுரலிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதுரலிய கெலிங்கந்த கனிஷ்ட கல்லூரியில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை

புலத்சிங்கல, படகலகந்த அமரகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டனர்.