யாழில் ஆசிரியரை தாக்கியவர் இன்றிரவு சரணடைந்தார்
Sri Lanka Police
Jaffna
Crime
Sri Lankan Schools
By Sumithiran
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் இன்று இரவு 7:30 மணியளவில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த நபரை கைது செய்யக்கோரி இன்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு சந்தேக நபரை கைது செய்யுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவந்த போதிலும் காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை.
காவல் நிலையத்தில் சரண்

இந்த நிலையில் ஆசிரியரை தாக்கியவர் தானாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதேவேளை ஆசிரியரை தாக்கியவரை கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் - ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி