மனித தோலால் ஆன டெடி பியர்: அமெரிக்காவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் மனித தோலால் ஆன சிதைந்த டெடி பியர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நடைபாதையில் மனித தோலால் ஆன சிதைந்த டெடி பியர் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொம்மை
ஒரு பெட்ரோல் பங்கிற்கும் பேருந்து தரிப்பிடத்திற்கும் இடையிலான நடைபாதையில் குறித்த டெடி பியர் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல் பார்வையில், மனித தோல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ஒரு டெடி பியர் பொம்மையில் தைக்கப்பட்டது போல் தோன்றியுள்ளது.
அதன் கண்கள், உதடுகள், மூக்கு போன்றவையும் மனிதனின் கண்களை ஒத்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையில் இது மனித தோலால் ஆன டெடி பியர் பொம்மை அல்ல, மாறாக சாதாரண தோல் போன்ற ஒரு பொருளால் ஆனது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் குழுவும் அதில் எந்த மனித திசுக்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இது தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு கலைஞரால் உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

