காசாவில் மீண்டும் முடக்கப்படும் இணையத்தள சேவை : மீட்பு பணிகளில் சிக்கல்
காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் மீண்டும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 3ஆவது மாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதோடு, காசாவில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மீட்புப் பணிகள்
இதுகுறித்து பாலஸ்தீனிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறும்போது, காசாவில் இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இணைய சேவை மற்றும் தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக காசாவில் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில் காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |