இதய அறுவை சிகிச்சைக்காகப் காத்துக்கிடக்கும் பத்தாயிம் பேர்
Heart Attack
Hospitals in Sri Lanka
Doctors
Patient
By Jaso
அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என, மருத்துவ மற்றும் குடிமை உரிமை மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சைக்கான திகதி 2029 வரை நீடிக்கப்பட்டதால், நோயாளிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு
சில அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், நோயாளிகள் சில ஆய்வகப் பரிசோதனைகளைத் தனியார் துறையில் செய்துகொள்ள வேண்டியுள்ளது என அந்தச் சிறப்பு மருத்துவர் குறிப்பிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி