இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு!

Narendra Modi Pakistan India Jammu And Kashmir World
By Dhilak Apr 23, 2025 09:01 AM GMT
Report

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிரும் இந்தியா...! காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் - 27 பேர் பலி

அதிரும் இந்தியா...! காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் - 27 பேர் பலி

பயங்கரவாத அமைப்பு

கடந்த 2023 ஆம் ஆண்டு, பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்தல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்துதல் போன்ற பிரச்சாரங்களுக்காக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் TRF ஐ "பயங்கரவாத அமைப்பு" என்று இந்திய உள்துறை அமைச்சகத்தினால் (MHA)அறிவிக்கப்பட்டது.

இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு! | Terrorist Outfit Behind J K Attack On Tourists

காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு TRFஅமைப்பு மிரட்டல் விடுத்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில், நேற்றையதினம் (22) TRF பயங்கரவாத அமைப்பினால் தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதோடு, 40 பேருக்கும் மேலதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முழு பலத்துடன் பதிலடி

இந்த நிலையில், குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்ததோடு, தாக்குதலில் பின்புலத்தில் உள்ளவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு! | Terrorist Outfit Behind J K Attack On Tourists

அத்தோடு, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்துள்ளார்.  

ஆட்டம் காணும் இந்தியா பாதுகாப்பு...! பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பாரா மோடி

ஆட்டம் காணும் இந்தியா பாதுகாப்பு...! பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பாரா மோடி



you may like this


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி