ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கிடைத்த நன்றிக்கடன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது.
இதன் விளைவாக, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட மாடிவெல எம்.பி.க்கான உத்தியோகபூர்வ இல்லத்தை திருப்பி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
எனினும், மாடிவெல வீட்டுத் திட்டத்தில் இதுவரை உத்தியோகபூர்வ வதிவிடத்தைப் பெறாத ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. மனுஷா நாணயக்கார, சம்பந்தப்பட்ட வீட்டை முன்பதிவு செய்துள்ளார்.
தனக்கு உத்தியோகபூர்வ குடியிருப்பு கிடைத்தாலும், அங்கு குடியேற எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்தார். அந்த வீடு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு திருப்பித் தரப்படும் என்றும், அவர் தொடர்ந்து வீட்டைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தான் பதவியில் இருக்கும் வரை அந்த வீட்டை ரஞ்சன் ராமநாயக்க பொது சேவைக்காக பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரபல அழகு கலைஞர் சந்திமல் ஜெயசிங்கவும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு வீட்டை வழங்க முன்வந்துள்ளார் என்று சமீபத்திய ஊடக செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.