அது அவரின் தனிப்பட்ட கருத்து எனினும் அவரை நாம் அவமதிக்கமாட்டோம் - அரசாங்கம் அறிவிப்பு
dullas alagaperuma
bandulla gunawardene
personal opnion
By Sumithiran
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மாதமொன்றுக்கு 100,000 க்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளைத் தொடர்வதற்காக வரி வசூலிக்க "எனது நண்பர் அமைச்சர் பந்துல குணவர்தன தனிப்பட்ட முறையில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
அவர் சில காரணங்களால் அப்படி ஒரு திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும்.
நாங்கள் அவரை அவமதிக்க மாட்டோம். அது அவருடைய தனிப்பட்ட திட்டம். " எனத் தெரிவித்தார்.