எங்களின் காலத்தில் 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்படும்! எதிர்க்கட்சி உறுதி
நல்லாட்சி அரசாங்கத்தில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவானது சுயாதீனமான கட்டமைப்பாகக் காணப்பட்டதுடன் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் சமாந்தரமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் தற்போது அவை நடைமுறையில் இல்லாமையினால் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தவர்கள் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ப நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போ து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தமது கட்சி மீண்டும் ஆட்சிபீடமேறினால் 19 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் திருத்தமொன்றை கொண்டுவரத்தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.