பளைப்பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்து - ஒருவர் படுகாயம்
accident
police
kilinochchi
investigation
palai
By Jaso
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி சந்தி பகுதியில் இன்று இரவு கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் வேககட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியுள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த நபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி