ட்ரம்ப் வரிவிதிப்பின் எதிரொலி: பாரிய வீழச்சி கண்ட டொலர்
அமெரிக்கா (United States) டொலர் மதிப்பைவிட ஜப்பான் (Japan) மற்றும் இங்கிலாந்து (England) கரன்சி மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் தெரிவித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பரஸ்பர வரியை அறிவித்தார்.
அத்தோடு, இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் அமெரிக்க கருவூலத்துக்கு அதிகளவில் நிதி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள்
பல்வேறு நாடுகள் மீது வரி விதிக்கப்பட்ட நிலையில், நட்பு நாடான ஜப்பான் மீதும் 15 சதவிகித வரியை அறிவித்தார்.
இந்தநிலையில், ஜப்பான் கரன்சியான யென் மதிப்பு அதிகரித்துள்ளதுடன் இந்த மதிப்பு உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பும் முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிராக யென் 0.4 சதவிகிதமும், யூரோ 0.25 சதவிகிதமும், இங்கிலாந்தின் பவுண்டு 0.20 சதவிகிதமும் மற்றும் ஆஸ்திரேலிய டாலர் 0.2 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளது.
வரி விதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, அந்நாட்டில் முதலீடுகள் குறைந்ததுடன், அமெரிக்க டொலரைவிட தங்கம் மற்றும் மற்ற கரன்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இங்கிருந்துதான், டாலர் மதிப்பு சரியத் தொடங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் முதலீடுகள் குறைந்ததால், பணவீக்கம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதுடன் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால்தான் முதலீடுகள் வரப்பெறும் இதுவே, சங்கிலித் தொடர்போல டொலர் மதிப்பை பின்னோக்கித் தள்ளத் தொடங்கியுள்ளன.
அதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியாலும் அவர்கள் சொந்த கரன்சியை பயன்படுத்துவதாலும் அமெரிக்க டொலர் சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
