அமெரிக்காவின் அடிவருடி நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டன! தொல்.திருமாவளவன்

India Mullivaykal Thol.Thirumavalavan Liberation Leopards Party
By Chanakyan May 18, 2021 09:35 AM GMT
Report

2009ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் லட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்,

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் குருதிச் சேற்றில் ஓய்ந்தது.

மேதகு பிரபாகரன் தலைமையிலான புலிப்படையினரைப் பயங்கரவாத அமைப்பினர் என முத்திரைக்குத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்னும் பெயரில் அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தைத் தீட்டி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற ஏராளமான நாடுகளின் உதவியோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றினர்.

ஏறத்தாழ 22 நாடுகள் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளுக்கு எதிராக நேர்முகாகவோ மறைமுகமாகவோ அதில் பங்கேற்றன. அதாவது, அரசு சார்பில்லாதவொரு மக்கள் அமைப்புக்கு எதிராக, 22 அரசுகள் அனைத்து வகையான படைவலிமையுடன் போர்க்களத்தில் மோதின.

போர்மரபுகள் எதனையும் பின்பற்றாமல் நச்சுக் குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசி, புலிகள் அல்லாத பொதுமக்களையும் அழித்தொழித்தனர். இது பயங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் ஏகாதிபத்திய நாடுகளால் அரங்கேற்றப்பட்ட இன அழிப்புப் போராகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இன விடுதலை இயக்கம் என அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக பயங்கரவாத இயக்கமென்று உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் நசுக்கப்படுவதற்குப் புலிகளுக்கு எதிரான இந்த உத்தியே சிங்களவர்களுக்கு மிகப் பெருமளவில் கைக் கொடுத்தது.

அமெரிக்க இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாத ஒழிப்பை முன்னிறுத்தி உலகநாடுகளை ஒருங்கிணைப்பது அமெரிக்காவுக்கு இலகுவாக அமைந்துவிட்டது. அதுவே சிங்களவர்களுக்கும் ஏதுவாக அமைந்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் நலன்கள் என்னும் பெயரில் இந்திய ஆட்சியாளர்கள், சிங்களவர்களுக்குத் துணையாக தோள்கொடுத்து நின்றனர்.

அமெரிக்காவின் அடிவருடி நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டன. ஈழத்தமிழர் சிக்கலானது, சர்வதேச சமூகத்தின் பிடிக்குள் போய்விட்டதால், ஐநா பேரவையும் அந்தப் பேரவலத்தைக் கடைசி வரையில் வேடிக்கை பார்க்கவே செய்தது. குறிப்பாக, ஐ.நா மனித உரிமை அமைப்பு அந்தப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த தவறி விட்டது.

இனக்கொலைக் குற்றவாளிகளான ராஜபக்‌ஷ கும்பலை சர்வதேக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்துத் தண்டிப்பதற்கு இதுநாள் வரையிலும் ஐ.நா பேரவை பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிங்கள அரசின் நட்பைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டிவருகின்றன.

இந்நிலையில்,சர்வதேசக் குற்றவாளிகளான ராஜபக்‌ஷ கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் ஈழத்தமிழர்களின் தாயகத்தை அனைத்து வகையிலும் ஆக்கிரமிப்புச் செய்து சிங்களக் குடியேற்றம் போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

அத்துடன், யாழ் பல்கலைக் கழக வளாகத்திலும் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நிறுவப் பட்டிருந்த நினைவுச் சின்னங்களைச் சிங்களப்படையினர் தகர்த்தெறிந்துள்ளனர். இன அழித்தொழிப்பு மட்டுமின்றி ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டச் சுவடுகளை அழிப்பதிலும் குறியாக உள்ளனர்.

சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இத்தகைய மேலாதிக்கப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆவது ஆண்டாக நினைவுகூரப்படும் இந்நாளில், ஐ.நா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறுதியேற்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அடிவருடி நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டன! தொல்.திருமாவளவன் | The Genocide Staged In Srilanka


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026