சூடுபிடிக்கும் அரசியல் களம்! வெலிகம மேயருக்கு எதிர்க் கட்சியில் கிடைந்த செயலாளர் பதவி
Sajith Premadasa
SJB
SriLanka
Weligama
By Chanakyan
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், வெலிகம மேயருமான ரெஹான் ஜெயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவரின் சமூக மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை எதிர்க்கட்சித்தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை இன்று எதிர்க்கட்சித் தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் கொழும்பு எதுல் கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து ரெஹான் ஜெயவிக்ரேமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுயமாக கொள்கை ரீதியாக செயற்படும் ரொஹான் ஜயவிக்ரம ஓர் சிறந்த இளம் தலைவர் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி