கூகுள் நிறுவனம் எடுத்துள்ள முக்கிய முடிவு!
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை வீட்டில் இருந்தே பணிபுரியலாம் எனத் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்து பணி புரிவதை நீட்டித்தது கூகுள் நிறுவனம் கொரோனா ஒரு தொற்று நோய் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார மையம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தன.
இதனால் சிறு நிறுவனம் முதல் கூகுள், முகநூல் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் உள்பட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கேட்டுக்கொண்டது.
இந்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் 2ஆவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியை தொடர்ந்தனர்.
தற்போது 2ஆவது அலை கட்டுக்குள் வந்துள்ளதாலும், பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்கிவிட்டதாலும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலைப்பார்க்க கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் கூகுள் நிறுவனம் இன்னும் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு அழைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படமாட்டார்கள்.
அழைக்கப்படுவதற்கு முன் சுமார் ஒருமாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்படும் என அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏராளமான உலகளாவிய நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் எங்களுடைய 10 ஆயிரம் ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வரவேற்க இருக்கிறோம் என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கூகுள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட இதற்கான ஏற்பாடுகள் சற்று தொலைவில் உள்ளன. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஒன்றிணைவோம்’ என்று தெரிவித்து்ளளார்.
மேலும், அலுவலகத்திற்கு அழைக்கப்படுவதற்கு முன் 30 நாட்கள் காலஅவகாசம் கொடுப்போம். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கூடுதல் ஓய்வு நாட்களை அவர்கள் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்