நாட்டின் முக்கிய துறைகள் வீழ்ச்சி!
Srilanka
Health
Education
Anura Kumara Dissanayaka
Economy
By MKkamshan
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியன வீழ்ச்சி அடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து, வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, அரசாங்கம் வெளிநாடுகளுக்கு சொத்துக்களை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் சீனாவிற்கும், திருகோணமலை எரிபொருள் தாங்கி இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
