மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்! மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட தரப்பிடம் விசேட விசாரணை
பொதுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கை ஒன்றை, பொது நிதிக் குழு ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் கடந்த ஜூன் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காணாமல் போன நிதிகள் குறித்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் குழுவிடம் சமர்ப்பித்த முந்தைய அறிக்கையை மத்திய வங்கி ஆய்வு செய்த பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மத்திய வங்கியின் அவதானிப்பு
இதற்கிடையில், குழு உறுப்பினர்கள் மத்திய வங்கியின் அவதானிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர்.

மேலும், பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா, நிதி அமைச்சகத்தின் அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் அறிக்கை ஆகிய இரண்டையும் பரிசீலித்த பின்னர் குழு, ஒரு இறுதி அறிக்கையைத் தயாரித்து உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 மணி நேரம் முன்