தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி ஏன் முப்படையினரை ஈடுபடுத்தினார்?

people battaramulla kamal gunaratne
By Shalini Aug 11, 2021 12:45 AM GMT
Report

இராணுவம் என்றவுடன் மருத்துவ துறை தெரியாத பீரங்கி தூக்குபவர்களை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிலர் நினைக்கின்றனர்.

மாறாக இராணுவ மருத்துவத்துறையில் அனுபவம் பெற்றவர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் செயற்படும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள் ஒன்லைன் முறைமையில் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது.

இதன் போது மேலும் குறிப்பிடுகையில்,

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பாக முப்படையின் மருத்துவ துறையினர் ஈடுபடுத்தப்பட்டமையின் பலனாக நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கில் வழங்கப்பட்டுவந்த தடுப்பூசி இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.

நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பது என்பது தேசிய பாதுகாப்பை சார்ந்ததாகும் என்று தெரிவித்த அவர்,

உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய் பரவும் சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு படைவீரர்களை சாரும்.

எனவே தான் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி முப்படையினரை ஈடுபடுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். .

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பில் சிந்தித்து பார்க்கவே முடியாது.

பயங்கரவாதம், பிரிவினைவாதம், இயற்கை அனர்த்தம் மற்றும் மக்களுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய்ப்பரவல் அனைத்தும் தேசிய பாதுகாப்பை சாரும். அந்த அடிப்படையிலேயே மக்களின் நலனை கருத்திற் கொண்டு முப்படையினரை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளார்.

இராணுவத்தினர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளமையை சிலர் தேவையற்ற விதத்தில் விமர்சிக்கின்றனர்.

இராணுவம் என்றவுடன் மருத்துவ துறை தெரியாத பீரங்கி தூக்குபவர்களை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிலர் நினைக்கின்றனர்.

மாறாக இராணுவ மருத்துவத்துறையில் அனுபவம் பெற்றவர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை பாதுகாப்புச் செயலாளர் என்றவைகயில் தான் பொறுப்புடன் கூறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பாக முப்படையின் மருத்துவ துறையினர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் பலனாக கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை துரிதமாக பாதுகாக்க முடிந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன சுட்டிக்காட்டினார்.

ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020