மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : கோழி இறைச்சியின் விலை சடுதியாக குறைவு
Mannar
Sri Lanka
Economy of Sri Lanka
Egg
By Sathangani
மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டைக் கோழிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இறைச்சிக் கோழி மற்றும் முட்டைக் கோழி விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்படவில்லை
குறிப்பாக ஒரு கிலோ இறைச்சிக் கோழி 1,360 ரூபாவாகவும் முட்டைக் கோழி ஒரு கிலோ 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இறைச்சிக் கோழிக்கான விற்பனை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் 1,450 -1,500 ரூபா வரையில் கோழி இறைச்சி விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்