நீதிக்கான போராட்டம் தொடரும் - சுகாஸ் திட்டவட்டம்
death
protest
child
sugas
By Vanan
டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான விசாரணைகள் அரசியல் ரீதியாக அணுகப்படாது சட்டம் ஒழுங்குக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டமைக்கான சான்றுகள் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமது நீதிக்கான போராட்டம் தொடரும் எனவும் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூறியுள்ளார்.
வீட்டு வேலைகளுக்காகச் சென்று தீக்காயங்களுக்கு உள்ளாகி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடு பூராகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி