வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதிக்கு உரித்துடையவர்களே
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற போதிலும், அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது எனவும் கூறினார்.
இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்வதற்கான வாய்ப்பும், கடப்பாடும் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்மிரிதி சிங் உரை - 01.07.00
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |