ஆப்கானிஸ்தானில் மற்றுமொரு நகரை கைப்பற்றிய தலிபான்கள்
War
Afghanistan
Taliban
By Chanakyan
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான குண்டூசை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நகரத்தின் விமான நிலையம் தவிர மற்ற அனைத்தும் தீவிரவாத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குண்டூஸுல் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகள் தீக்கிரையாகியுள்ள அதேவேளை நகரில் தாலிபான்களின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
தற்போது குண்டூஸ் கனகரத்துடன் சேர்த்து மூன்றாவது பிராந்திய தலைநகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
20 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப்படைகளின் வௌியேற்றத்தை தொடர்ந்து தலிபான்கள் அங்கு மீண்டும் தலைதூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி