சாரதியின் கவனயீனத்தால் பலியான சிறுவன்: மக்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனம்
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் மதுபோதையில் சாரதி செலுத்திய கனரக வாகனத்தில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் நேற்று(29) இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் குறித்த கனரக வாகனத்திற்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளமையினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
கனரக வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது, துவிச்சக்கரவண்டியில் வந்த சிறுவனை அவரது மூத்த சகோதரரையும் மோதியுள்ளனர்.
தப்பி ஓடிய சாரதி

பின்னர், கனரக வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் பிரதேசவாசிகள் அவர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், விபத்தின் பின்னர், காவல்துறையினரின் தலையீட்டினால் பிரதேசத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு தீர்வு காணப்பட்டதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.