கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவன் மாயம்
Sri Lanka Police
Missing Persons
By Sumithiran
மட்டக்குளி சாகர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சுற்றுலா வந்த நிலையில் ஹலவத்தை விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஹலவத்தை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கன பண்டாரவத்த பக்வா பகுதியைச் சேர்ந்த மலித் திமந்த ஜயலத் என்ற 23 வயதுடைய மாணவரே காணாமல் போயுள்ளார்.
சுற்றுலாவிற்கு வருகை தந்த மாணவர்

ரம்புக்கன பிரதேசத்தில் இருந்து சுற்றுலாவிற்கு வருகை தந்த மாணவர் ஹலவத்தை விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஹலவத்தை தலைமையக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீனவர்களின் உதவியுடன்

ஹலவத்தை காவல்துறை அதிகாரிகள் குழு மீனவர்களின் உதவியுடன் காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி