யாழ். காங்கேசன்துறை தொடருந்தில் தொடர் திருட்டு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறையில் (Kankesanturai) தொடருந்தில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இரவு வேளையில் தொடருந்தில் தரித்து நின்றபோது கடந்த ஒன்பதாம் திகதி இனம் தெரியாத குழுவொன்று திருட்டில் ஈடுபட்ட சமயம், தொடருந்தில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்ற நிலையில் நான்கு 20 லீட்டர் கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டவாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
எரிபொருள் தாங்கி
தொடருந்து எரிபொருள் தாங்கியின் திறப்புக்கள் அனுராதபுரத்திலேயே (Anuradhapura) இருப்பதாக கூறப்படும் நிலையில் குறித்த திருட்டுக்கு தொடருந்து நிலைய ஊழியர்களும் உடந்தையாக செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ச்சியாக எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருள் திருடப்பட்டு வந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை காவல்துறையினர் மற்றும் தொடருந்து திணைக்களத்தினர் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |