முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு விவகாரம்- அனைத்து செயற்பாடுகளும் மட்டக்களப்பில் முடக்கம்!
Protest
Batticaloa
University of Jaffna
By Vasanth
மட்டு.மாவட்டத்தில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் வர்த்தக அனுஸ்டிக்கப்படுவதால் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இடித்து அகற்றியதைக் கண்டித்தே இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. அதேவேளை பாடசாலைகளுக்க ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் சென்றிருக்கவில்லை.
களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை கொக்கட்டிச்சோலை, உட்பட பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பித்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.









மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி