உயர்பீட பௌத்த தேரர் அரசிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
vaccine
corona
goverment
thero
By Jaso
பௌத்த பிக்குகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து கொவிட் தடுப்பூசியை வழங்குமாறு உயர் பீடத்திலுள்ள பௌத்த துறவி ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதிவாளர் வண. மெதகம தம்மானந்த தேரர் இன்று கண்டியில் அரசிடம் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.
பல தேரர்கள் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தம்மானந்தா தேரர் புத்த சாசன அமைச்சிடம் துறவிகளுக்கு சிறப்பு முன்னுரிமையில் தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை தடுப்பூசியைத் தொடங்கியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னுரிமை அடிப்படையில் மதகுருக்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்தார்.
எனினும் தற்போது தடுப்பூசியை வழங்குவதில் இலங்கை பெரும் நெருக்கடியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்