முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்
தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் (T. Raviharan) மக்கள் தொடர்பகத்தில் இன்று (15) நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
மலர் அஞ்சலி
அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




