மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்
Batticaloa
Tamil National United Front
P Ariyanethran
By Sathangani
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று (26) மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தினர்
இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழரசு கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முரளிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |