அவுஸ்திரேலியா வாழ் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!
Mullivaikal Remembrance Day
Australia
Srilankan Tamil News
By Kathirpriya
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகளை அவுஸ்திரேலியாவிலும் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வினை அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள், மற்றும் தமிழ் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
உண்ணாவிரத நோன்பு
இதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், பிரிஸ்பேர்ண், சிட்னி,பேர்த் ஆகிய நான்கு நகரங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளை 24 ஆம் திகதி மெல்பேர்னிலும், 26 ஆம் திகதி பிரிஸ்பேர்ண் மற்றும் சிட்னியிலும், செப்டம்பர் 30 ஆம் திகதி பேர்த்திலும் நினைவேந்தல் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையில் உண்ணாவிரத நோன்பும், இரவு 7 மணிக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி!
மரண அறிவித்தல்
