திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு : டக்ளஸ் வெளியிட்ட தகவல்!
திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், மறுபுறம் தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே குடுமிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தை தான் தற்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தனக்கான காலம் வரும்போது அதற்கான உரிய செயற்றிட்டத்தை முன்வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.
மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் மும்மன்னர்களின் சிலை
கடந்த காலங்களிலும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் மும்மன்னர்களின் சிலை, உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் சிலை, முத்திரைச் சந்தியில் சங்கிலியனின் கம்பீரமான சிலை மற்றும் மடத்தடியில் தணிகாசலம் அடிகளாரின் சிலை உள்ளிட்டவற்றை நிறுவுவதில் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த காலங்களில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நினைவூட்டிய டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் உரிய நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |