பாடசாலைகள் ஆரம்பம் : கல்வி அமைச்சு அறிவிப்பு
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (03) ஆரம்பமாகின்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக ஏப்ரல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சாதாரண தர பரீட்சை
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நிலையில் பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |