ஈரான்-இஸ்ரேல் மோதலை முன்கூட்டியே கணித்த நாஸ்டர்டாம்ஸ்!
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஆரம்பமாகியுள்ள மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.
இந்த பதற்றத்திற்கு இடையே மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்டர்டாமஸின் திகிலூட்டும் கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நாஸ்டர்டாமஸ் 465 வருடங்களுக்கு முன் தனது நூலில் உலகில் நடைபெறப்போவது தொடர்பில் எழுதியவை அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையிலேயே, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் தொடர்பான அவரது கணிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மூன்றாம் உலகப் போர்
மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூளும் பட்சத்தில் இது மூன்றாவது உலக போராக வெடிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நாஸ்டர்டாமஸின் கணிப்பு
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்டர்டாமஸ் எதிர்காலத்தில் உலகில் நடக்க போவதை Les Propheties எனும் தனது புத்தகத்தில் கவிதைகளாக எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் தொடர்பாக நாஸ்டர்டாமஸ் மற்றும் ஆல்பர்ட் பைகே ஆகியோரின் கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
"சிவப்பு நிறம் கொண்ட எதிரி தனக்கு இருக்கும் பயத்தால், பெருங்கடலை பயத்திற்கு உள்ளாக்குவார்" என்று நாஸ்டர்டாமஸ் கூறி உள்ளார்.
"சிவப்பு எதிரி" என்று நாஸ்ட்ராடாமஸ் சீனாவை குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விடயம் செங்கடலில் நிலவும் பதற்றத்தை வெளிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.
ஆல்பர்ட் பைக்கின் கணிப்பு
அத்துடன், அமெரிக்க சிவில் போரின் போது அதாவது கடந்த 1871 ஆம் ஆண்டு அந்த நாட்டு படைத்தளபதியாக இருந்த இருந்த ஆல்பர்ட் பைக், எழுதிய கடிதமும் தற்போது பரவலாகி வருகிறது.
குறித்த கடிதத்தில், “மூன்றாம் உலகப் போர் யூதர்களுக்கும் இஸ்லாமிய உலகத்தின் தலைவர்களுக்கும் இடையேயானதாக இருக்கும். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் அழித்து கொள்வார்கள்" என எழுதியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |